/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களில் குற்றங்கள் தடுப்பு; கேமரா பொருத்த ஆலோசனை
/
கிராமங்களில் குற்றங்கள் தடுப்பு; கேமரா பொருத்த ஆலோசனை
கிராமங்களில் குற்றங்கள் தடுப்பு; கேமரா பொருத்த ஆலோசனை
கிராமங்களில் குற்றங்கள் தடுப்பு; கேமரா பொருத்த ஆலோசனை
ADDED : மே 31, 2024 06:22 AM
மானாமதுரை : சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி, டூவீலர் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறும்இடங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள்பொருத்த ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சி தலைவர்கள் போலீசார் கலந்து கொண்டனர்.