/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வாட்டர் ஆப்பிள் பறவைகளின் இரைக்காக வளர்ப்பு
/
சிவகங்கையில் வாட்டர் ஆப்பிள் பறவைகளின் இரைக்காக வளர்ப்பு
சிவகங்கையில் வாட்டர் ஆப்பிள் பறவைகளின் இரைக்காக வளர்ப்பு
சிவகங்கையில் வாட்டர் ஆப்பிள் பறவைகளின் இரைக்காக வளர்ப்பு
ADDED : ஜூலை 26, 2024 12:37 AM

சிவகங்கை:சிவகங்கையை சேர்ந்தவர் பி.சுப்பிரமணியன். கூட்டுறவு துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண்டாங்கிபட்டியில் ஒரு ஏக்கர் நிலத்தில், மா, கொய்யா, பேரிக்காய், சப்போட்டோ, நெல்லி, மாதுளை, ஆரஞ்சு, பிளம்ஸ் போன்ற பழ மரங்களை வளர்த்து வருகிறார்.
இந்தோனோசியா, மலேசியா, ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, வட இந்திய பகுதிகளில் விளையும் ‛வாட்டர் ஆப்பிள்' மரங்களை இங்கு வளர்த்து வருகிறார்.
முற்றிலும் தண்ணீர் சத்து கொண்ட இப்பழம் கொழுப்பு சத்து இல்லாதது. மருத்துவ குணநலன் கொண்ட இப்பழத்தை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இங்கு விளையும் பழங்களை விற்பனை செய்யாமல் பறவைகளின் உணவிற்காக மரத்திலேயே விட்டு விடுகிறார்.