தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்

விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்

விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்


ADDED : ஜூலை 11, 2024 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை:'சர்வர்' பிரச்னை உள்ளதால் பணியாளர்கள் விருப்ப மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க மாநிலஅமைப்பு செயலர் எம்.என். கந்தசாமி கூறியதாவது:

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவின்படி தமிழக பொதுப்பணி, அமைச்சுப் பணி, அனைத்து வகை பணியாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபோருக்கு மாறுதல் வழங்க விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை - எமிஸ், இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால், சர்வர் பிரச்னை இருப்பதால் பதிவேற்றம் செய்ய சிரமப்படுகின்றனர். இதற்கு ஜூலை 10 முதல் நேற்று மாலை 6:00 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல் உடல்நிலை பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மருத்துவச் சான்று இணைத்தால் ஏற்கனவே பணிபுரிந்த இடத்திலேயே பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us