/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
/
கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
ADDED : மே 28, 2024 05:24 AM

மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வகையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 39 ஊராட்சி பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வகையில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டுமென்று கடந்த சில வருடங்களுக்கு முன்பே மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டுஇருந்தது.
ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாமல் இருப்பதினால் தற்போது மானாமதுரை பகுதிகளில் நீர் நிலைகளிலும் கருவேல மரங்கள் அதிகஅளவில் வளர்ந்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்க செய்கிறது.