/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பாலத்தில் பக்க சுவரில் வளரும் செடிகளால் பாதிப்பு
/
திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பாலத்தில் பக்க சுவரில் வளரும் செடிகளால் பாதிப்பு
திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பாலத்தில் பக்க சுவரில் வளரும் செடிகளால் பாதிப்பு
திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பாலத்தில் பக்க சுவரில் வளரும் செடிகளால் பாதிப்பு
ADDED : ஜூலை 12, 2024 04:34 AM

திருப்புவனம்: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள பாலங்களின் பக்க சுவரில் பல இடங்களில் வளர்ந்து வரும் செடிகளால் பாலத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. சிலைமான், மணலுார், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பாலங்கள் புதிதாக கட்டப்பட்டவை ஆகும்.
நான்கு வழிச்சாலையில் வாகனப் போக்குவரத்து தொடங்கி ஏழு வருடங்கள்ஆன நிலையில் பல பாலங்கள் போதிய பராமரிப்பு இன்றி விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பாலத்தின் பக்க சுவர் இடைவெளிகளில் வேம்பு, புளி, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து பாலத்தின் தாங்கு திறனை பாதித்து வருகிறது.
பாலங்களின் பக்கவாட்டு பகுதியில் மரம் வளர்வதால் அதில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் விழும் நிலையில் உள்ளது. பாலங்களின் பக்கவாட்டு பகுதியில் வளரும் மரங்களின் வேர் பாலத்தின் உட்புறம் வரை நீண்டு வருவதால் தார்ச்சாலையும் சேதமடையும் அபாயம் உள்ளது.
விபத்து உள்ளிட்ட காலங்களில் கீழே இறங்குவதற்கு பாலத்தின் மையப்பகுதியை ஒட்டி இரும்பு ஏணிகள் அமைக்கப்பட்டுஉள்ளன. இந்த ஏணிகள் பலவும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளன. விவசாயிகள் பலரும் பாலத்தை ஒட்டி வாகனங்களை நிறுத்திவிட்டு ஏணி வழியாக வயல்வெளிக்கு செல்வது வழக்கம், ஏணி பழுதடைந்து இருப்பதால் வேறு வழியின்றி பாலத்தை சுற்றி சென்று வருகின்றனர்.
எனவே நான்கு வழிச்சாலையில் உள்ள பாலங்களை முறையாக பராமரிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.