ADDED : மே 05, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை நகர் 15வது வார்டில் உள்ளது மஜித் ரோடு பகுதி. பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் இந்தப் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் கலெக்டர்அலுவலகத்திற்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. மஜித் ரோடு போஸ் ரோடு சந்திப்பில் தான் இந்த சேதமான பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சுவர் முழுவதும் சேதமடைந்துள்ளது.
ரோட்டின் இருபுறமும் பள்ளமாக இருப்பதால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.