/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சேதமடைந்த எச்சரிக்கை விளக்கு
/
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சேதமடைந்த எச்சரிக்கை விளக்கு
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சேதமடைந்த எச்சரிக்கை விளக்கு
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சேதமடைந்த எச்சரிக்கை விளக்கு
ADDED : ஆக 15, 2024 04:58 AM

திருப்புவனம் : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விளக்கு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை தலா 10 மீட்டர் அகலம் கொண்டஇருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. நான்குவழிச்சாலையின் குறுக்கே பல கிராமங்களுக்கு சாலைகள் செல்கின்றன.
கிராமப்புறங்களுக்கு செல்லும் இச்சாலைகளை நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல இடங்களில்எச்சரிக்கை விளக்கு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.
விளக்கு அமைக்கப்பட்டு பல ஆண்டு கடந்த நிலையில் விளக்கு அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.
சேதமடைந்த இடங்களில் புதிய விளக்கு பொருத்த பல முறை வலியுறுத்தியும் இதுவரை நான்கு வழிச்சாலை நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.