/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ராம்நகரில் ஆபத்தான மின்கம்பம்
/
மானாமதுரை ராம்நகரில் ஆபத்தான மின்கம்பம்
ADDED : ஜூன் 20, 2024 04:52 AM

மானாமதுரை: மானாமதுரை ராம் நகரில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை ராம்நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ராம்நகர் முகப்பில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளே இருக்கும் கம்பி துருப்பிடித்த நிலையில் மின் கம்பம் எப்போது சாய்ந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.
மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
மின்வாரிய நிர்வாகம் உடனடியாக சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.