ADDED : ஜூன் 19, 2026 10:44 PM
திருப்புவனம், ஜூன் 20-
திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் பழுது காரணமாக பத்திரப்பதிவை தாமதப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில கிராமங்களின் நிலங்கள், வீடுகளும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 25 டோக்கன் வரை வழங்கப்பட்டு பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. சர்வர் பழுதை காரணம் காட்டி பத்திரப்பதிவை தாமதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று பொறுப்பு சார்பதிவாளர் பணியில் இருந்த போது 80 டோக்கன் வழங்கப்பட்டன. மாலை நான்கு மணி வரை 15 டோக்கன்களுக்கான பத்திரம் மட்டும் பதிவு செய்யப்பட்டன. சர்வர் பழுது என கூறி சிவகங்கையில் இருந்து டெக்னீசியன் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது.
