/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தவறிய பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
/
தவறிய பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ரியாசத் 27. இவர், காரைக்குடியில் தார்ப்பாய் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை காரைக்குடி செகண்ட் ஸ்ட்ரீட் அருகே ரியாசத் சென்ற போது அவர் வைத்திருந்த ரூ.16 ஆயிரம் தவறி விழுந்தது.
இதனை அவர் பார்க்காமல் சென்ற நிலையில் அவ்வழியாக சென்ற, நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் பணத்தை அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரிடம் ஒப்படைத்தார். பணத்தை தொலைத்த ரியாசத் அப்பகுதியில் பணத்தை தேடி வந்துள்ளார்.
கடைக்காரர்கள் அவரை பணத்துடன் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.