நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், குற்றவியல் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதம், ஹிந்தி மொழியில் மாற்றியிருப்பதைக் கண்டித்தும், புதிய சட்டங்களை அமல்படுத்தியிருப்பதை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் கோர்ட் முன் தலைவர் பாலமுருகன், செயலாளர்,கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.