நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க.,அரசை கண்டித்து மானாமதுரையில் நாம் தமிழர் கட்சியினர் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகரத் தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் விஜயகாந்தி, முத்துக்குமார், வைரமுத்து முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் மற்றும் மாவட்ட செயலாளர் குகன்மூர்த்தி உரையாற்றினர்.
முத்துக்குமார், மகேந்திரன், மனோஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.