நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மத்திய மாநில அரசுகள் புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர்சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கருப்புச்சாமி, துணைச்செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தனர்.
விவசாயசங்க மாநிலத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், இந்திய கம்யூ., நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச்செயலாளர் சரவணன், தொழில்சங்க நகர பொருளாளர் முருகன் கலந்துகொண்டனர்.

