ADDED : மே 07, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, மே 8-–
வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வேயில் 30 ஆயிரம் பணியிடங்களை குறைப்பதை கண்டித்து கம்யூ., கட்சிகள் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர் மருது, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் பாலையா, ஒன்றிய செயலாளர் சின்னகருப்பு, பன்னீர்செல்வம், நகர் செயலாளர் சகாயம் பங்கேற்றனர்.
//
