ADDED : ஜூலை 28, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, ஜூலை 29-
காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளாட்சி பணியாளர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் ராஜா இ.கம்யூ., மாநகர செயலாளர் சிவாஜி காந்தி, நிர்வாகி சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர். அடையாள அட்டை, வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி குறிப்பிட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்வதோடு, முறையாக ரசீது தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
