/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
/
கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 07, 2024 02:10 AM
தேவகோட்டை: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்கு முன் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நேற்று காலையிலும் மாவட்ட கல்வி அலுவலகம் முன் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராமராஜன் தலைமையில் ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகரன், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் டேவிட் அந்தோணிராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.