ADDED : ஆக 15, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி ஐந்து விளக்கில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையேற்றார். மாநில இலக்கிய அணிச் செயலாளர் செல்வராஜ், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாவட்ட அவைத் தலைவர் சந்திரன், மாவட்ட பொருளாளர் சார்லஸ் மாவட்டத் துணைச் செயலாளர் தனபாலன், மாநில நிர்வாகிகள் முத்துச்சாமி, பாலுச்சாமி, சேது தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் மாயாண்டி ராஜ்கமல் மருதுபாண்டியன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.