/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிலத்தை பாதிக்கும் மரங்களை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
/
நிலத்தை பாதிக்கும் மரங்களை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
நிலத்தை பாதிக்கும் மரங்களை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
நிலத்தை பாதிக்கும் மரங்களை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 05:12 AM
சிவகங்கை: விவசாய நிலங்களுக்கு அருகில் வளர்ந்துள்ள சீமைகருவேல், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.வீரபாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன், பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஆறுமுகம், அண்ணாத்துரை, துணை தலைவர் அழகர்சாமி, ஜெயராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் வேங்கையா, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றி, மாடுகள், மான்கள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் இருக்க, வனக்காட்டிற்குள் வேலி அமைத்து கட்டுப்படுத்த வேண்டும். விவசாய நிலங்களை பாதிக்க செய்யும் சீமைக்கருவேல், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.