/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரையில் மானாமதுரை பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு
/
மதுரையில் மானாமதுரை பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு
மதுரையில் மானாமதுரை பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு
மதுரையில் மானாமதுரை பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு
ADDED : மே 31, 2024 06:18 AM
மானாமதுரை : மதுரை மாட்டுத்தாவணி(எம்.ஜி.ஆர்)பஸ் ஸ்டாண்டிலிருந்து மானாமதுரை செல்லும் பயணிகளை ஏற்ற மறுப்பதால் பயணிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினம்தோறும் மதுரைக்கு பல்வேறு பணி சம்பந்தமாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி (எம்.ஜி.ஆர்) பஸ் ஸ்டாண்டிலிருந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல மானாமதுரை வழியாக பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏறச்சென்றால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சில் ஏறவிடுவதில்லை.
இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு வேண்டுமென்றால் நின்று கொண்டே வாருங்கள் என்று கூறி கடைசியில் ஏற அனுமதிக்கின்றனர். மேலும் ஒரு சில பஸ்களில் நின்று செல்வதற்கு கூட அனுமதிக்காமல் அவர்களை மிகவும் தரக்குறைவாக திட்டுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
மானாமதுரை பயணிகள் சிலர் கூறியதாவது:
மதுரை மாட்டுத்தாவணி(எம்.ஜி.ஆர்) பஸ் ஸ்டாண்டிலிருந்து மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகளை ஏற்ற நீண்ட காலமாக மறுத்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போக்குவரத்து கழக அதிகாரிகள் பயணிகளின் நலன்கருதி மதுரை மாட்டுத்தாவணி (எம்.ஜி.ஆர்) பஸ் ஸ்டாண்டிலிருந்து மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.