/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை ரேஷன் கடையில்துாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்
/
தேவகோட்டை ரேஷன் கடையில்துாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்
தேவகோட்டை ரேஷன் கடையில்துாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்
தேவகோட்டை ரேஷன் கடையில்துாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 01, 2024 04:45 AM
சிவகங்கை: தேவகோட்டை ரேஷன் கடையில் துாங்கிய விற்பனையாளர் நித்தியராஜை 32, சஸ்பெண்ட் செய்து மண்டல மேலாளர் அருண்பிரசாத் உத்தரவிட்டார்.
தேவகோட்டை சொர்ணநாதன் தெருவில் அமுதம் எண் 10 ரேஷன் கடை உள்ளது. இதன் விற்பனையாளராக நித்தியராஜ் 32, பணிபுரிந்தார்.
நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரேஷன் கடையில் ஜூலை 29 அன்று விற்பனையாளர் கடையை திறந்து வைத்து, அரிசி மூடைகளின் மீது படுத்து துாங்கி கொண்டிருந்தார்.
பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மக்கள், அவரை பல முறை அழைத்தும் எழுந்திருக்கவில்லை. இது குறித்து கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர்.
நுகர்பொருள் வாணிப கழக சிவகங்கை மண்டல மேலாளர் அருண்பிரசாத் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் தேவகோட்டை ரேஷன் கடை விற்பனையாளர் நித்தியராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறியதாவது:
ரேஷன் கடையில் துாங்கியதாக வந்த புகாரின் பேரில், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். மாற்றாக மற்றொரு விற்பனையாளரை நியமித்து, அமுதம் கடை எண் 10ல் தடையின்றி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.