/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தியான பீட மகா கணபதி கோயில் சதுர்த்தி விழா
/
தியான பீட மகா கணபதி கோயில் சதுர்த்தி விழா
ADDED : செப் 08, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: திருமணவயலில் தியான பீடம் அமைக்கப்பட்டு உச்சியில் மகா கணபதி வீற்றிருக்கும் நிலையில் கோவில் உள்ளது. சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
தேவகோட்டை ஞானதான சபையினரால் அபிராமி அந்தாதி முற்றோதல் நடைபெற்றது. காரைக்குடி வள்ளி பாலகிருஷ்ணன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது.
இன்று காலை பெண்கள் நடத்தும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை மகா கணபதி ஆலய டிரஸ்டிகள் செய்திருந்தனர்.