தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை சில்லறை பிரச்னைக்கு தீர்வு

பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை சில்லறை பிரச்னைக்கு தீர்வு

பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை சில்லறை பிரச்னைக்கு தீர்வு


ADDED : பிப் 15, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம் : பஸ்களில் இனி சில்லறை பிரச்னை இல்லை, அரசு பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்கப்பட்டதால் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் தினசரி லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். தினசரி பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல பலரும் அரசு பஸ்களை நம்பியே உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மதுரை -- ராமேஸ்வரம் வழித்தடத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களில் பெரும்பாலும் சில்லறை பிரச்சனை கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன.

டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகி வரும் நிலையில் அரசு பஸ்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன டிக்கட் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. அதி நவீன வசதிகள் கொண்ட இந்த இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழக காரைக்குடி கோட்டம் மூலம் மதுரை,சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட 11 கிளைகள் செயல்படுகின்றன. இதில் மதுரை கிளை மூலமாக 53 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் முதல் கட்டமாக டிஜிட்டல் பரி வர்த்தனை தொடங்கப்பட் டுள்ளது.

பயணிகள் டிக்கட் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மதுரை கிளை பஸ்களில் செலுத்தலாம், இதற்காக குறிப்பிட்ட பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுஉள்ளன. பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் உள்ள குறைபாடுகளை களைய முதல் கட்டமாகமதுரை கிளை பஸ்களில் செயல்படுததப்பட்டுள்ளன.

திட்டம் வெற்றிகரமாக செயல்படும் நிலையில் அனைத்து கிளைகளிலும், இதனை செயல்படுத்தபோக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us