/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பழுது சிவகங்கையில் நோயாளிகள் அவதி
/
மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பழுது சிவகங்கையில் நோயாளிகள் அவதி
மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பழுது சிவகங்கையில் நோயாளிகள் அவதி
மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பழுது சிவகங்கையில் நோயாளிகள் அவதி
ADDED : பிப் 22, 2025 10:52 PM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் பழுதானதால் நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் தினமும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் விபத்தாகி வரும் நோயாளிகளுக்கு எலும்பு முறிவு குறித்து அறிய உடனுக்குடன் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் திசுக்களில் உள்ள கட்டி குறித்து அறிவதற்கும் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் உள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது.
கடந்த 6 மாதமாக எக்கோ பரிசோதனை மையத்தில் இயந்திரம் இருந்தும் பரிசோதிக்க டாக்டர்கள் இல்லாததால் பரிசோதனை மையம் செயல்படவில்லை.
இதயம் சம்பந்தமான சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப படுகின்றனர். தொடர்ந்து டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் பயிற்சி டாக்டர்களே ஈடுபடுத்த படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மருத்துவமனையில் 4 எக்ஸ்ரே இயந்திரம் உள்ளது. எக்ஸ்ரே எடுப்பதில் தாமதம் ஏதும் இல்லை. ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
ஒரே ஒரு டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் பழுதாகியுள்ளது. அந்த இயந்திரத்திற்கு பழுதான பொருள் வெளிநாட்டில் இருந்து வரவேண்டியுள்ளது. விரைவில் இயந்திரம் சரி செய்யப்படும். டாக்டர்களை பணியமர்த்த அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.