/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் செங்கல் கட்டுமானம் கண்டெடுப்பு
/
கீழடியில் செங்கல் கட்டுமானம் கண்டெடுப்பு
ADDED : செப் 09, 2024 09:58 AM
கீழடி : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடியில் நடக்கும் 10ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அகழாய்வு பணிகள் ஜூன், 18ம் தேதி, 25 சென்ட் நிலத்தில் துவங்கியது.
முதற்கட்டமாக தோண்டப்பட்ட நான்கு குழிகளில் தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடுகள், மீன் உருவம் பதித்த பானை ஓடுகள், சுடுமண் பானைகள், அணிகலன்கள், சுடுமண் குழாய் போன்ற அமைப்பு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிய கூடுதலாக நான்கு குழிகள் தோண்டப்பட்டன. இதில், எட்டாவதாக தோண்டப்பட்ட குழியில் இரண்டு வரிசைகளாக சுடுமண்ணால் கட்டப்பட்ட நான்கு செங்கல் வரிசைகள் வெளிப்பட்டுள்ளன.
ஒன்றரை அடி ஆழத்திலேயே செங்கற்கள் முழுமையாக வெளிப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கீழடியில் நடந்த அகழாய்வில் ஏராளமான செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது.
இதனால் கீழடி பண்டைய காலத்தில் மிகப்பெரிய நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.