/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரப்பும் நிலை
/
கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரப்பும் நிலை
ADDED : ஜூலை 11, 2024 05:11 AM

தேவகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்தது தென்னீர்வயல் கிராமம். 300 குடும்பங்களுக்கும் மேலாக வசிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள சுகாதார சீர் கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
வடக்கு தெரு வழியாக செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவு ஓடி பெரிய மண் கால்வாய்க்கு செல்ல வேண்டும். இடையில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் வீணாகும் தண்ணீரும் குடிநீர் பிடிக்கும் போது வீணாகும் தண்ணீரும் இந்த கால்வாயில் கலந்து வெளியேற வேண்டும்.
ஆனால் வெளியேறாமல் வடக்கு தெரு கால்வாய் முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மையமாக மாறி நோய் பரப்பும் நிலையில் உள்ளது. வடக்கு தெரு கால்வாய் 15 வது நிதிக் குழுவில் 2021-22ம் ஆண்டில் ரூ. 2.43 லட்சத்தில் கட்டப்பட்டது. கட்டி 20 மாதம் கூட ஆகவில்லை. இந்த கால்வாய் மூடியுள்ள சிமென்ட் சிலாப் சிதைந்து உடைந்துள்ளது . புதிய கால்வாய் மேலிருந்து கீழ் நோக்கி கட்டப்பட்டு இருந்தும் கூட கால்வாயின் மறு எல்லைக்கே கழிவுநீர் ஒரு சொட்டு கூட வராமல் அடைபட்டுள்ளது.
குடியிருப்புகளின் வாசலில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் மிதப்பதால் துர்நாற்றம் மற்றும் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். 20 மாதங்களே ஆன சிதைந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு முதலில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.