/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்னையில் நோய்: அதிகாரிகள் ஆய்வு
/
தென்னையில் நோய்: அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 10, 2024 05:52 AM
திருப்புவனம்: தினமலர் இதழில் வெளியான செய்தியை அடுத்து திருப்புவனம் வட்டாரத்தில் நோய் பாதித்த தென்னை மரங்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. ஓலையில் உள்ள சாற்றை உறிஞ்சி விடுவதால் மட்டை காய்ந்து உதிர்ந்து விடுகிறது.
தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து திருச்சி மத்திய ஒருங்கிணைந்த தாவர பாதுகாப்பு மைய பூச்சியியல் வல்லுனர் கோவிந்தராஜ், உதவி தாவர பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய அறிவியல் உதவியாளர் அபின் மற்றும் திருப்புவனம் தோட்டக்கலை அலுவலர்கள் நோய் பாதித்த தென்னை மரங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
பின் திருப்புவனம் வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்னை விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம், விளைச்சல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் தெரிவித்தனர்.