/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமாதான கூட்டத்தில் தகராறு: 10 பேர் கைது
/
சமாதான கூட்டத்தில் தகராறு: 10 பேர் கைது
ADDED : பிப் 25, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே பாதரக்குடி ஊராட்சியில் குடிநீர் ஊருணியை துார்வார வலியுறுத்தியும், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், சமுதாய கிணறு பகுதியை முறைகேடாக அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுதந்திர தொழிலாளர் கட்சி சார்பில்காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
நேற்று தாசில்தார் ராஜா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தலைவர் சக்திவேல் மற்றும் தாசில்தார் ராஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் வெளியேற்றினர். ஆத்திரமடைந்து அலுவலகத்தின் வெளியில் அமர்ந்து, போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய10 பேரை போலீசார் கைது செய்தனர்.

