/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : பிப் 22, 2025 10:36 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்து துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் திட்ட செயல்பாடு குறித்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் நடக்கும் திட்ட செயல்பாடு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி ஆய்வு செய்தார். வருவாய்துறை சார்பில் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனி நகர்புறப்பகுதி,போக்குவரத்து துறை சார்பில் புதிய மினி பஸ் திட்டத்தின் கீழ் முத்தனேந்தல், இடைக்காட்டூர், பாப்பாக்குடி ஆகிய ஊராட்சிகள், வேலுார் சிப்காட் வழியாக மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வரை செல்லும் புதிய மினி பஸ் செல்லும் வழித்தடங்கள் தொடர்பாக பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத் துறைகளில் கலெக்டர் ஆஷாஅஜித் உள்ளிட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.