/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தி.மு.க., ஒன்றிய செயலாளர், நகராட்சி தலைவர் மோதல்
/
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தி.மு.க., ஒன்றிய செயலாளர், நகராட்சி தலைவர் மோதல்
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தி.மு.க., ஒன்றிய செயலாளர், நகராட்சி தலைவர் மோதல்
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தி.மு.க., ஒன்றிய செயலாளர், நகராட்சி தலைவர் மோதல்
ADDED : பிப் 25, 2025 07:23 AM

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி சார்பில் புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான அண்ணாத்துரை மற்றும் ஒன்றிய பணியாளர்கள், நகராட்சி தி.மு.க., தலைவர் மாரியப்பன்கென்னடி, கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை நகராட்சியில் வசிப்போருக்கு வைகை ஆற்றில் இருந்து வழங்கப்படும் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இத்திட்ட குழாய்கள் சேதமடைந்து அடிக்கடி குடிநீர் வழங்கும் பணி பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் ஓராண்டிற்கு முன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.39 கோடியில் புதிய குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஆங்காங்கே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டப்படுகின்றன.
சிவகங்கை ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் உள்ள காலி இடத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை வாய்மொழி உத்தரவிட்டதையடுத்து நேற்று மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் ஒப்பந்ததாரர்கள் பணியை துவக்கினர்.
ஆனால் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் லதாவின் கணவரும், ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான அண்ணாத்துரை ஆகியோர் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உத்தரவை காண்பித்து விட்டு பணியை தொடரும்படி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நகராட்சி தலைவர் (தி.மு.க.,)மாரியப்பன் கென்னடி, தி.மு.க., நகர் செயலாளர் பொன்னுச்சாமி, கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் மற்றும் கவுன்சிலர்கள் அங்கு சென்று,''ஏன் பணியை தடுத்து நிறுத்தினீர்கள். மாவட்ட நிர்வாகம் கூறியதால் பணி நடக்கிறது. மக்கள் நலனுக்கான திட்டத்தை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்,' என அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.ஐ., ராஜதுரை மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பிறகு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., சோமதாஸ் நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் குடிநீர் தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்த பிறகு பணியை துவங்கலாம் என கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

