/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உதயநிதி துணை முதல்வராக வேண்டி தி.மு.க., பெண் கவுன்சிலர் வழிபாடு
/
உதயநிதி துணை முதல்வராக வேண்டி தி.மு.க., பெண் கவுன்சிலர் வழிபாடு
உதயநிதி துணை முதல்வராக வேண்டி தி.மு.க., பெண் கவுன்சிலர் வழிபாடு
உதயநிதி துணை முதல்வராக வேண்டி தி.மு.க., பெண் கவுன்சிலர் வழிபாடு
ADDED : ஆக 15, 2024 04:10 AM
சாலைக்கிராமம்: சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி சாத்தையா. இவர் இளையான்குடி ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர்.
உதயநிதி துணை முதல்வராக வேண்டுமென்று அய்யம்பட்டியில் உள்ள கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து வைத்து கோயிலில் வழிபாடு நடத்தினார்.
இவர் கூறியதாவது: தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிற நிலையில் அவரை துணை முதல்வராக்க வேண்டுமென்றும், இப்பகுதியில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து நடத்தி குடும்பத்தோடு வழிபாடு செய்தோம் என்றார்.