/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த நாய்கள்; விளையாடிய மாணவிகளை கடித்து குதறியது
/
அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த நாய்கள்; விளையாடிய மாணவிகளை கடித்து குதறியது
அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த நாய்கள்; விளையாடிய மாணவிகளை கடித்து குதறியது
அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த நாய்கள்; விளையாடிய மாணவிகளை கடித்து குதறியது
ADDED : ஜூன் 30, 2024 05:14 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்த தெருநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளை கடித்தது.
இப்பள்ளியில் நேற்று மதியம் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில மாணவிகள் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே வந்த நாய் ஒன்று 7ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளை கடித்துவிட்டு ஓடிவிட்டது. ஒரு மாணவிக்கு ரத்த காயமும், இன்னொருவருக்கு லேசான கீறலும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்த ஆசிரியர்கள் மாணவிகளை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இப்பேரூராட்சி பகுதியில் சமீபகாலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல நாய்கள் பள்ளி வளாகங்களில் தங்கிக் கொள்கின்றன. அவற்றிற்கு ரேபிஸ் நோய் தாக்கி வெறிபிடிக்கும் பட்சத்தில் மாணவர்களை கடிக்கும் அபாயம் உள்ளது. ஒரு சில பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர் இருந்தும் பயனில்லாமல் ஓட்டையாக உள்ளது. சிறிய பள்ளிகளில் அதுவும் இல்லை. இதனால் பெருகிவரும், பள்ளி வளாகத்தில் தங்கும் நாய்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நகரில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளி வளாகத்திற்குள் நாய்கள் நுழையாதவாறு காம்பவுண்ட் சுவர், சல்லடை கம்பி கொண்ட நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வற்புறுத்தி உள்ளனர்.