/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 27, 2024 05:14 AM

சிவகங்கை, : சிவகங்கையில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர்கள் லிங்கப்பாண்டி, சோமசுந்தரம், எஸ்.ஐ.,கள் ஹரி கிருஷ்ணன், ஜெகதீஷன், மணிகண்டன், சிறப்பு எஸ்.ஐ., தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராகவும், கள்ள சாராயத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி, புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அழகப்பா அரசு கலைக் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் சரவணன், வித்யாகிரி கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சேது, கல்பனா கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கலா, கஸ்துாரி, ஈஸ்வரி செய்துஇருந்தனர்.
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். தாசில்தார் மாணிக்கவாசகம், டி.எஸ்.பி. ஆத்மநாதன் முன்னிலையில் கலெக்டர் ஆஷா அஜீத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் கலைவாணி, முதல்வர் ஜெயக்குமார், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு, மாரிமுத்து, செல்வி மற்றும் பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், போலீசார் பங்கேற்றனர்.
மானாமதுரை: மானாமதுரை ஒ.வி.சி.,மேல்நிலைப் பள்ளியில் இலவச சட்டப் பணி ஆணைக் குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, ரயில்வே ஸ்டேஷன் குழந்தைகள் காவல் அலுவலர் புஷ்பராணி, குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் சத்தியமூர்த்தி, போதை மறுவாழ்வு மைய ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.