/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துவார் மஞ்சுவிரட்டு 410 காளைகள் பங்கேற்பு
/
துவார் மஞ்சுவிரட்டு 410 காளைகள் பங்கேற்பு
ADDED : மே 26, 2024 04:10 AM

நெற்குப்பை: திருப்புத்துார் ஒன்றியம் துவாரில் நடந்த மஞ்சுவிரட்டில் 410 காளைகள்பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
துவார் வள்ளிலிங்கம் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. காலை 9:30 மணிக்கு கிராமத்தினர் கிராம கோயில்களில் வழிபாடு நடத்திய பின் மேளதாளத்துடன் ஊர்வலமாக தொழுவிற்கு வந்தனர். தொடர்ந்து தொழுவிற்கு பூஜை நடந்து காலை 10:30 மணிக்கு காளைகள் தொழுவில்இருந்து அவிழ்க்கப்பட்டன. கோயில் காளைகள் முதலில் களத்திற்கு வந்தன.
பின்னர் வரிசையாக 410 காளைகள் மதியம் 12:20 மணி வரை அவிழ்க்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை பிடித்தனர். பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும் கிராமத்தின் சார்பில் பரிசு பொருள் வழங்கப்பட்டது. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
கட்டு மாடுகளும் பரவலாக வயல்களில் அவிழ்க்கப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் முதுலுதவி அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த இருவர் மட்டும் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அமைச்சர் பெரியகருப்பன், திரைப்பட தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் பங்கேற்றனர். ஏற்பாட்டினை கிராமத்தினர், இளைஞர்கள் செய்தனர்.