/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை வெயிலால் காய்ப்பு குறைந்த தென்னை
/
கோடை வெயிலால் காய்ப்பு குறைந்த தென்னை
ADDED : மே 16, 2024 06:50 AM

திருப்புவனம் : தமிழகத்தில் நிலவிய கோடை வெயில் தென்னை மரங்களையும் கடுமையாக பாதித்து விளைச்சல் குறைந்துள்ளது.
திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, கானுார் உள்ளிட்ட வைகை ஆற்றுப்படுகையில் தென்னந்தோப்புகள் உள்ளன.திருப்புவனம் தேங்காய் மும்பை, குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
திருப்புவனம் பகுதியில் மழை இல்லாவிட்டாலும் வைகை ஆறு செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக இருக்கும். மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர்பாய்ச்சி விவசாயம் செய்வது வழக்கம், இந்தாண்டு கடும் கோடை வெயில் காரணமாக தண்ணீர் பாய்ச்சினாலும் விரைவில் தரை உலர்ந்து விடுகிறது.
இதனை தவிர்க்க விவசாயிகள் தென்னை மரங்களுக்கு அடியில் தேங்காய் மட்டைகளை போட்டு வைத்தாலும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு மரத்திற்கு 25 காய் வரை விளைந்த நிலையில் ஒருசில காய்கள் மட்டுமே விளைந்துள்ளன.
காய்ப்பு திறன் குறைந்த தென்னை மரங்களை பாதுகாக்க வேளாண் துறை சார்பில் எந்த வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.