/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மழையால் மண்பாண்ட கூடம் பாதிப்பு
/
மானாமதுரையில் மழையால் மண்பாண்ட கூடம் பாதிப்பு
ADDED : மே 11, 2024 10:36 PM

மானாமதுரை:மானாமதுரையில் தொடர் மழைக்கு மண்பாண்ட தொழில் கூடங்களை மழை நீர் சூழ்ந்ததால், மண்பாண்ட தொழில்கள் பாதித்துள்ளன.
மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழகத்தில் 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிற நிலையில் மக்கள் புழுக்கம் தாங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கோடை மழைக்கு மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கோடை விவசாயம் செய்து வந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மழை நீர் மானாமதுரை மண்பாண்ட தொழிற் கூடங்களுக்குள் சூழ்ந்ததினால் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி பாதித்துள்ளன. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது.