நெற்குப்பை : நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நுாலகத்தின் வாசகர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர்.
நெற்குப்பையில் உள்ள 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நுாலகத்தின் மாணவ வாசகர்களுக்கு கோடை முகாம் நடத்தப்பட்டது.
பொது அறிவு நிகழ்ச்சி, வாசிக்கும் திறன் வளர்ச்சி, பரதநாட்டியம், யோகா, உடற்பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம், சிவகங்கை வேலு நாச்சியார் மணி மண்டபம், மாவட்ட கலெக்டர் வளாகம், மாவட்ட மைய நுாலகம் மற்றும் மதுரை பேப்பனையம்பட்டியில் சோமசுந்தர விநாயகர் கோயில் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் டாக்டர் எம். எஸ். ஸ்ரீலட்சுமி, டாக்டர் சரஸ்வதி ராமநாதன், டாக்டர் தேவி நாச்சியப்பன், நாச்சியப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர். நூலகர் பாஸ்கரன், நூலக உதவியாளர் மீனாள் ஒருங்கிணைத்தனர்.