ADDED : ஜூன் 19, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம் நாளை நடக்கிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஜூன் 17ல் கழுவன் விரட்டு திருவிழா நடந்தது. கழுவன் வேடமிட்டவரை ஊர் சபைக்கு அழைத்து வந்து மரியாதை செய்தனர். நேற்று இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (ஜூன் 20) ஆனித் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாட்டை தேவஸ்தானம், முறையூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.