ADDED : ஜூலை 14, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : திருப்புத்துார் புதுக்காட்டாம்பூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லுாரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் கேட்டரிங்மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், எலக்ட்ரானிக் டெக்னீசியன், இண்டஸ்ட்ரியல் லேண்ட் சர்வே, கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஹார்டுவேர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. பொருத்தமான சான்றிதழ் அல்லது தகுந்த அனுபவம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
முகாம் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. பங்கேற்க விரும்புபவர்கள்போட்டோ, சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். ஏற்பாட்டினை முத்தையா மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தினர் செய்கின்றனர்.