/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
/
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 19, 2024 04:58 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 21 அன்று காலை 10:30 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இம்முகாமில் வேலை வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யலாம். இம்மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடுவோர் தனியார் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி, வேலை பெறலாம். இங்கு இலவச திறன் பயிற்சி விண்ணப்பம், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு முடித்த இளைஞர்கள் ஆதார், ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அட்டையுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.