/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
/
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 05, 2024 10:10 PM
சிவகங்கை, - சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் ஆக.,9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆக.,9 அன்று காலை 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் நபர்களை தேர்வு செய்யலாம். இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை விண்ணப்பம் வழங்கப்படும்.
இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்ற இளைஞர்கள் உரிய கல்வி சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம்.