தேவகோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
தேவகோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
ADDED : ஜூலை 26, 2026 07:11 PM
தேவகோட்டை, ஜூலை 27–
தேவகோட்டையில் தேசிய, நகராட்சி ரோடுகளில் அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் கடைகள் வைத்து ஆக்கிரமிக்க துவங்கிவிட்டனர். நகராட்சி நிர்வாகம் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்.
இந்நகரின் முக்கிய வீதிகளில் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதாக போலீஸ், வருவாய், நகராட்சிக்கு பல தரப்பினர் புகார் எழுப்பினர். அதற்கு பின்னரும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து நகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்ததும், மூன்று துறையினர் ஒன்று சேர்ந்து சில நாட்களுக்கு முன் மெயின் ரோட்டில் உள்ள கடை ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றினர். பல பகுதிகளில் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் புற்றீசல் போல் பெருகிய நிலையில் அவற்றை அகற்ற முன்வரவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மெயின் ரோட்டிலேயே மீண்டும் கடைகள் வைத்து ஆக்கிரமிக்க துவங்கிவிட்டனர். இதை ஆரம்பத்திலேயே போலீசார் தான் தடுக்க வேண்டும். இக்கடைகளால் தான் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரிக்கும். இதனால் தொடர்ந்து மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்காமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். /// -
