ADDED : ஜூன் 02, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வைரஸ் தாக்குதல் காரணமாக மிளகாய் சாகுபடி முன்னதாக முடிவுக்கு வந்த நிலையில் செடிகளை விவசாயிகள் உழுது அழித்து வருகின்றனர்.
இத்தாலுகாவில் எஸ்.புதுார், செட்டிகுறிச்சி, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்திருந்தனர். இந்தாண்டு வெயில் மழை என அடுத்தடுத்து வானிலை மாற்றம் ஏற்பட்டதால் விளைச்சல் பாதித்தது. ஒடுவன்பட்டி பகுதியில் மிளகாய் செடிகளில் இலை சுருட்டல் உள்ளிட்ட வைரஸ் நோய் பாதிப்பு அதிகம் தென்பட்டது.
இதனால் மிளகாய் விளைச்சல் குறைந்ததுடன் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகினர். இனியும் காத்திருப்பது மேலும் நஷ்டத்தையே தரும் என்பதால் செடிகளை உழுது அடுத்த பயிர் சாகுபடிக்கு தயாராகி விட்டனர்.