/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
18ம் நுாற்றாண்டு கோட்டை அமராவதிபுதுாரில் ஆர்வலர்கள் வியப்பு
/
18ம் நுாற்றாண்டு கோட்டை அமராவதிபுதுாரில் ஆர்வலர்கள் வியப்பு
18ம் நுாற்றாண்டு கோட்டை அமராவதிபுதுாரில் ஆர்வலர்கள் வியப்பு
18ம் நுாற்றாண்டு கோட்டை அமராவதிபுதுாரில் ஆர்வலர்கள் வியப்பு
ADDED : ஏப் 27, 2024 04:38 AM

சிவகங்கை: காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் 18 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சி அளிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை வரலாற்று துறை பேராசிரியர் தி.பாலசுப்பிரமணியன், வரலாற்று ஆர்வலர் கருப்பையா கூறியதாவது:
அமராவதிபுதுாரில் உள்ள இக்கோட்டை பழமையானது. 5 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் உள்ளது. இக்கோட்டையை சுற்றி 10 மீட்டர் அகலத்தில் அகழி கட்டியது தனிச்சிறப்பாகும்.
அகழி இருந்தால், அக்கோட்டை மன்னர் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். இக்கோட்டை 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டை மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தி குதிரைகளுக்கான லாயமாக இருந்திருக்கலாம். சுற்றுச்சுவர் 6 அடி அகலத்தில் கட்டியுள்ளனர்.
அதிகபட்சம் 20 அடி உயரம் இருக்கும். சுண்ணாம்பு கடுக்காயை போட்டு அரைத்து, செம்பூரான் கற்கள் வைத்து கட்டப்பட்டவை.
இக்கோட்டை மன்னர் காலத்து தானிய கிடங்கு அல்லது ஆயுத கிடங்காக இருந்திருக்கலாம். பழங்கால வரலாற்று சிறப்பு பெற்ற கோட்டை சுவர்களை புனரமைத்து, சுற்றுலாத் தலமாக அறிவிக்கலாம், என்றனர்.

