/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் இளைஞர்களுக்கு ஆலோசனை தர மறுப்பு தொழில்முனைவோர் குற்றச்சாட்டு
/
சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் இளைஞர்களுக்கு ஆலோசனை தர மறுப்பு தொழில்முனைவோர் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் இளைஞர்களுக்கு ஆலோசனை தர மறுப்பு தொழில்முனைவோர் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் இளைஞர்களுக்கு ஆலோசனை தர மறுப்பு தொழில்முனைவோர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 25, 2024 11:41 PM
சிவகங்கை : மாவட்டத்தில் பட்டப்படிப்பு முடித்து தொழில் முனைவோராக மாற ஆலோசனை, வங்கி கடனுதவிக்காக சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தை நாடும் பட்டதாரிகளுக்கு அலுவலர்கள் உரிய ஒத்துழைப்பு தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் செயல்படுகிறது. இந்த மையம் மூலம் சிவகங்கையில் தொழில் முனைவோர் தொழில் துவங்க, மத்திய, மாநில அரசு பல்வேறு வங்கி கடனுதவியுடன் கூடிய தொழில் வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தர திட்டங்களை அறிவித்து வருகிறது.
குறிப்பாக வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தில் வியாபாரத்திற்கு ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. உணவு பதப்படுத்தும் சிறு, குறு நிறுவனங்களை ஏற்படுத்த மத்திய அரசு 60, மாநில அரசு 40 சதவீத பங்களிப்பு நிதியுடன் மானியங்கள் வழங்கி, தொழில்களை துவக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இதற்காக அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை இளைஞர்கள் அணுகலாம் எனவும் தெரிவிக்கிறது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நாடும் இளைஞர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சமாகிறது.
தொழில் முனைவோராகும் நோக்கில், இங்குள்ள அதிகாரிகளை இளைஞர்கள் தொடர்பு கொண்டால், முறையான பதில் அளிப்பதில்லை என்றும், தொழில் குறித்த பயிற்சி வகுப்புகளுக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
வங்கிகளுடன் இணைந்து மாவட்ட தொழில் மையம், இளைஞர்களுக்கு வங்கி கடனுதவிகளை பெற்றுத்தர வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், இளைஞர்களிடம் நீங்களே வங்கியை தொடர்பு கொண்டு கடனுதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறி விடுகின்றனர்.
முறையான பயிற்சிக்கு ஏற்பாடு
தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் கூறியதாவது:
'கொரோனா' பாதிப்பிற்கு பின் 'ஆன்லைனில்' பயிற்சி அளிக்கிறோம். மாவட்ட தொழில் மையத்திற்கு வரும் இளைஞர்களுக்கு முறையான பயிற்சி, தொழில் செய்வதற்கான ஆலோசனை, வங்கி கடனுதவியை பெற்றுத்தருவதற்கான பணி உரிய அதிகாரிகளை நியமித்து முறையாக செய்யப்படும் என்றார்.