சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக சமரச மையத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் துவக்கி வைத்தார். மதுரை மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை ஜெயசெந்தில் மேற்பார்வையில் டாக்டர் உதயராஜன் குழுவினர் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு கண்புரை, கண்ணீர் அழுத்தநோய் மற்றும் கண் கண்ணாடிக்கான பரிந்துரை வழங்கினார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமார், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, நீதிபதிகள் சாண்டில்யன், அனிதா கிறிஸ்டி, செல்வம், ஆப்ரின்பேகம் கலந்து கொண்டனர்.