ADDED : மார் 11, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் நர்சரி பள்ளி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாமை பள்ளியில் நடத்தினர். கே.எம்.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் கண்ணப்பன் முகாமை துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாவட்ட நர்சரி சங்க மாவட்ட செயலாளர் ஜெயதாஸ், செயலாளர் குமார், நேரு யுவகேந்திரா ஜவகர் கிருஷ்ணன், எஸ்எம் மஹால் சுந்தரமாணிக்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து பஞ்சவர்ணம்,பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, துணைத் தலைவர் கார்த்திகா, நல்லாசிரியர் கண்ணப்பன் கலந்து கொண்டனர். முகாமில் 312 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கண்ணாத்தாள் மழலையர் பள்ளி தாளாளர் பிச்சை செய்திருந்தார்.