நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கல்லல் வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேப்பங்குளத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பயிற்சி பள்ளி நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் செல்வி தலைமையேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் அழகுராஜா பேசினார். துணை வேளாண்மை அலுவலர் சேகர், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரகுபதி, விஜயகுமார் பேசினர்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் அன்பழகன், சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவிகள் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையை வயல்வெளிகளில் விவசாயிகளுக்கு செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர்.