/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிக்கும் செலவால் வளர்ப்பை தவிர்க்கும் விவசாயிகள்
/
திருப்புவனத்தில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிக்கும் செலவால் வளர்ப்பை தவிர்க்கும் விவசாயிகள்
திருப்புவனத்தில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிக்கும் செலவால் வளர்ப்பை தவிர்க்கும் விவசாயிகள்
திருப்புவனத்தில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிக்கும் செலவால் வளர்ப்பை தவிர்க்கும் விவசாயிகள்
ADDED : மே 03, 2024 05:30 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் குறைவு, நோய் தாக்குதல்,செலவீனம் அதிகரித்து வருவதால் கால்நடைகள் வளர்ப்பதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் மடப்புரம், பெத்தானேந்தல், செல்லப்பனேந்தல், ஏனாதி, கொந்தகை, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, எருமை மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்டவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கறவை மாடு, எருமை மாடு, வெள்ளாடு உள்ளிட்டவற்றில் லாபம் அதிகம் எனவே பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் போக உபரி தொழிலாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்ல தரமான கறவை மாடு நாள் ஒன்றுக்கு காலை, மாலை என சேர்த்து எட்டு முதல் 15 லிட்டர் வரை பால் கறக்கும், எருமை மாடுகள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 10லிட்டர் வரை கறக்கும், டீ கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் எருமை பால் அதிகமாக விரும்பி வாங்குவார்கள், காரணம் பால் நன்கு கெட்டியாக இருக்கும்.
திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை ஏனாதி 140, கொந்தகை 100, பழையனூர் 100, அல்லிநகரம் 60 போன்ற வெகு குறைந்த எண்ணிக்கையிலேயே எருமை மாடுகள் உள்ளன.
செம்மறி ஆடுகள் 15 ஆயிரத்து 510ம் வெள்ளாடுகள் 14 ஆயிரத்து 105ம் இருந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளில் 30 முதல் 40 சதவிகிதம் வரை கால்நடை வளர்ப்பு குறைந்துள்ளது.
மாவட்டத்திலேயே திருப்புவனம் பகுதியில் இருந்துதான் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவு பால் விற்பனை செய்யப்படுகிறது.
கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதால் பால் விற்பனையும் குறைய வாய்ப்புண்டு.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: கால்நடைகள் வளர்க்க செலவு அதிகரித்து வருகின்றன.
தீவன விலையேற்றம், மேய்ச்சல் நிலம் குறைவு, கண்மாய், குளம் போன்றவற்றில் நீர் இருப்பு இல்லாமை, போதிய கூலி ஆட்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது.
இதனையும் மீறி கால்நடை வளர்த்தால் போதிய விலை கிடைப்பது இல்லை. இதனால் பலரும் கால்நடை வளர்ப்பை தவிர்த்து வருகிறோம், என்றனர்.