/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மும்முனை மின்சாரத்தை சீரமைக்க தாமதமாவதால் விவசாயிகள் அவதி
/
மும்முனை மின்சாரத்தை சீரமைக்க தாமதமாவதால் விவசாயிகள் அவதி
மும்முனை மின்சாரத்தை சீரமைக்க தாமதமாவதால் விவசாயிகள் அவதி
மும்முனை மின்சாரத்தை சீரமைக்க தாமதமாவதால் விவசாயிகள் அவதி
ADDED : செப் 15, 2024 12:04 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மும்முனை மின்சாரம் தடைபடும் போது சீரமைக்க தாமதமாவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் முட்டாக்கட்டி, ஒடுவன்பட்டி, பிரான்மலை பகுதிகளில் மின் கம்பிகள் தாழ்வாகவும் மரக்கிளைகளுக்கு இடையிலும் செல்வதால் காற்று, மழை காலங்களில் மின்சாரம் தடைபடுகிறது.அப்போது விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மும்முனை மின்சாரம் தேவை என்பதால் ஒரு பேஸ் மின்சாரம் தடைபட்டால் கூட போர்வெல் மோட்டர்களை இயக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இது பற்றி புகார் வரும்போது மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு,நகர்ப்பகுதிகளுக்குள் உடனடியாக சரி செய்து விடுகின்றனர். ஆனால் காடு, வயல்,குடியிருப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சரி செய்ய தாமதமாகி விடுகிறது.
அப்பகுதியில் மூன்று நாள் வரை மின்சாரம் வராமல் பாதிப்பு எற்படுகிறது. அப்பகுதியில் போர்வெல் தண்ணீரை நம்பியே பயிர் செய்யப்பட்டுள்ள, மின்சாரம் இல்லாமல் பயிர்கள் காயும் நிலை உள்ளது.
மின்சார ஊழியர் பற்றாக்குறை காரணமாக நகர் மற்றும் கிராமங்களுக்கு வெளியில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய தாமதமாகி விடுகிறது. நிரந்தர தீர்வாக தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்து, இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.