/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீரமைக்கப்படாத மடைகளால் கேள்விக்குறியாகும் விவசாயம்
/
சீரமைக்கப்படாத மடைகளால் கேள்விக்குறியாகும் விவசாயம்
சீரமைக்கப்படாத மடைகளால் கேள்விக்குறியாகும் விவசாயம்
சீரமைக்கப்படாத மடைகளால் கேள்விக்குறியாகும் விவசாயம்
ADDED : மே 29, 2024 04:55 AM
எஸ்.புதுா : எஸ்.புதுார் ஒன்றியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத மடைகளால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.
இவ்வொன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கண்மாய்கள் உள்ளன.இவற்றில் பலவற்றில் மதகுகள் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மழைக்காலங்களில் முழுமையான அளவில் தண்ணீர் தேக்க முடியாமல் வீணாகி வருகிறது. விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் நடைபெற்ற மராமத்து பணி அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மடைகள் உயரமான இடத்தில் கட்டப்பட்டதால் தண்ணீரை பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்த முடியாமல் உள்ளது.
ஆர்.செந்தில்குமார், விவசாயி, கட்டுக்குடிப்பட்டி: ஒன்றியம் முழுவதும் பல இடங்களில் கண்மாயில் மதகு மற்றும் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக கட்டுக்குடிப்பட்டியில் உள்ள 6 கண்மாய்களில் ஒரு கண்மாய் மட்டும் மடை சீரமைக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தக்காரர்கள் மடையை உயரமாக கட்டியுள்ளனர்.
இதனால் பாதியளவு தண்ணீரை மட்டுமே பாசனத்திற்கு எடுக்க முடிகிறது. வருங்காலங்களில் அனைத்து கண்மாய்களையும் அந்தந்த ஆயக்கட்டுதாரர்கள் மூலமாகவே துார்வாரவும் மடைகளை சீரமைக்கவும் ஒப்படைக்க வேண்டும்.